For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காதலுக்கு எதிர்ப்பு- காதலர்கள் விஷம் அருந்தி உயிரிழப்பு!

11:56 AM Jan 03, 2025 IST | Web Editor
காதலுக்கு எதிர்ப்பு  காதலர்கள் விஷம் அருந்தி உயிரிழப்பு
Advertisement

உசிலம்பட்டி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ஜெயசூர்யா அதே ஊரில் பலசரக்கு கடை நடத்தி
வருகிறார். இவரும் அதே தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகளான பாண்டீஸ்வரி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோர்களும் தெரிந்ததும் இருவர் வீட்டாரும்  எதிர்ப்பை  தெரிவித்தனர். பாண்டீஸ்வரிக்கு அவரது தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலன் ஜெயசூர்யா கடைக்கு வந்த பாண்டீஸ்வரி காதலனுடன் இணைந்து இருவரும் விஷம் அருந்தி கடையில் மயங்கி கிடந்துள்ளனர்.

மயங்கி கிடந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி அரசு
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த சூழலில் இவர்களை பரிசோதித்த இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்  தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் எதிர்ப்பால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement