"நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!
விவாதம் தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
12:56 PM Jul 28, 2025 IST | Web Editor
Advertisement
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "விவாதத்திலிருந்து எதிர்க்கட்சிகள் ஓட முயற்சிக்கிறார்கள். விவாதம் தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர். நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்.
Advertisement
பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் விவாதம் வேண்டும் என புதிய கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தற்போது முன்வைக்கின்றன. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் விவாதம் நடத்த ஒப்புக்கொண்டால் தான் "ஆபரேஷன் சிந்தூர்" விவாதத்தில் பங்கேற்போம் என எதிர்கட்சிகள் கூறுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.