For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5000 கி.மீ.க்கு அப்பால் இருந்து ஆபரேஷன் - நுரையீரல் கட்டியை அகற்றும் வீடியோ வைரல்!

03:36 PM Aug 03, 2024 IST | Web Editor
5000 கி மீ க்கு அப்பால் இருந்து ஆபரேஷன்   நுரையீரல் கட்டியை அகற்றும் வீடியோ வைரல்
Advertisement

மருத்துவர் ஒருவர் 5000 கி.மீ.க்கு அப்பால் இருந்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

தொழில்நுட்பங்கள் உருவான பிறகு இந்த உலகத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்ட, சாத்தியமே இல்லை என கருதப்பட்ட அனைத்தும் வெற்றிகரகமாக சாத்தியமாக்கப்பட்டன. தொழில்நுட்பத்தின் வரவை வரலாற்று ஆய்வாளர்கள் ‘பெரும் புரட்சி’ என குறிப்பிடுகின்றனர்.

தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தை தவிர்த்துவிட்டு வாழ்வது கடினம். நம் அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. மிகவும் குறிப்பாக மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு வந்த பிறகு அவை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தன. மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பக்கத்து அறையில் அமர்ந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்வதை கற்பனை செய்ய முடியுமா?

ஆனால் 5000 கி.மீ.க்கு அப்பால் இருந்து கொண்டு நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றியுள்ளார். நுரையீரல் கட்டி ஒன்று உருவாகிய நிலையில் அதனை அகற்றுவதற்காக நோயாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.  நோயாளி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து சுமார் 5,000 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே வெற்றிகரமாக அதனை மருத்துவர் அகற்றியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பல வருட ஆராய்ச்சியின் முடிவில் ஒரு மணி நேரத்தில் நோயாளியின் நுரையீரல் கட்டியை அகற்றியுள்ளார். மருத்துவர் ஒருவர் 5000 கி.மீ. அப்பால் உள்ள ஷாங்காயில் இருந்து கொண்டு காஷ்கரில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு ரோபோவை பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை சாத்தியமாக்கியுள்ளார். இந்த அறுவை சிகிச்சை  மருத்துவர்கள் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்றுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

Tags :
Advertisement