Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது!” - அமைச்சர் சேகர்பாபு

11:57 AM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது. அதற்கு உடந்தையாக ஆளுநரே செல்கிறார் என்பதுதான் விந்தையாக உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசாமி திருக்கோயில்
மண்டபத்தில் தை கிருத்திகை பெருவிழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை
வீடுகளின் பெருமைகளை போற்றும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த கண்காட்சியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டார். கண்காட்சியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் முருகன் அமர்ந்திருக்கும் வடிவில் தத்ரூபமாக அலங்காரத்துடன் அமைக்கப்பட்டு ஆறுபடை வீடுகளில் சிறப்பு பிரசாத பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதனைப் பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து தை கிருத்திகை சிறப்பு விழாவில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

சுத்தமான கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவினரிடம் மட்டுமே உள்ளது . அதற்கு உடந்தையாக ஆளுநரும் செல்கிறார் என்பது விந்தையாக உள்ளது.  ஏற்கனவே பாம்பன் சுவாமிக்கு நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடிய அரசு திமுக அரசு. ஏற்கனவே ஆலயங்கள் அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டிருக்கும் அரசு திமுக அரசு. இப்போது பாஜகவினர் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

மேலும், முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தை கிருத்திகை தைப்பூச தினத்தன்று அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அன்றும் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்குவதற்கு மட்டும் ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அத்திட்டம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags :
#CleanBJPChennainews7 tamilNews7 Tamil Updatessekar babuTamilNaduTemple
Advertisement
Next Article