மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் - கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து, 35
சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சு
வார்த்தையில் தீர்வு காணப்படாத சுழலில், திட்டமிட்டப்படி இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது. திமுகவை சேர்ந்த எல்.பி.எஃப் தொழிற்சங்க தொழிலாளர்கள் மட்டும் தற்போது பணிபுரிந்து வருகிறார்கள்.
பேருந்தும், 9 புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் மணப்பாறையில் 35 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் என பலரும் பேருந்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். மேலும், மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.