For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரு வாகனம் ஒரு FASTag விதி... ஜனவரி 31 கடைசி நாள்!

03:38 PM Jan 16, 2024 IST | Web Editor
ஒரு வாகனம் ஒரு fastag விதி    ஜனவரி 31 கடைசி நாள்
Advertisement

ஒரு வாகனம், ஒரு ஃபாஸ் டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) கொண்டுவந்துள்ளது. சுங்கக் கட்டண வசூல் முறையை எளிதாக்க இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது.

Advertisement

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ‘ஃபாஸ்டேக்’ என்ற முறையைப் பயன்படுத்தி ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் மூலம் தாமாக கட்டணத்தை வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது.

இதன் மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திராமல் பயணத்தைத் தொடர முடியும். சுங்கக் கட்டணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் 50-க்கும் அதிகமான நகரங்களில் 140-க்கும் அதிகமான வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் கனரக சரக்கு வாகனங்களுக்கான நிறுத்துமிட கட்டணமும் ஃபாஸ்டேக் மூலமாக வசூலிக்கப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஃபாஸ்டேக் எண்களுக்கான கேஒய்சி படிவத்தை ஜனவரி 31-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால், அந்த ஃபாஸ்டேக் எண் காலாவதியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இதுவரை ஃபாஸ்டேக் எண்ணுடன் கேஒய்சி முறையை பூர்த்தி செய்யாவிட்டால், ஐஎச்எம்சிஎல் வாடிக்கையாளர் இணையதளத்துக்குச் சென்று டேஷ்போர்டு மெனுவில் சென்று கேஒய்சியை பூர்த்தி செய்யலாம்.

இதன்மூலம், ஒரே ஃபாஸ்டேக் எண்ணை பலரும் பல வாகனங்களுக்குப் பயன்படுத்தும் நடைமுறை தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே கேஒய்சி-யை ஜனவரி 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யாவிடில், அந்த ஃபாஸ்டேக் எண் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags :
Advertisement