ஓணம், தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள்! - #SouthernRailway அறிவிப்பு
ஓணம் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இது போன்ற சமயங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும். ஓணம் பண்டிகை, கேரள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகையாகும். அதன்படி, ஓணம் பண்டிகை செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஓணம் சிறப்பு ரயில்
ரயில் எண். 07119 - செகந்திராபாத்தில் இருந்து செப்டம்பர் 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், குண்டூர், காட்பாடி, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு மறுநாள் இரவு 11.20-க்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07120 - கொல்லத்தில் இருந்து செப். 15 (ஞாயிறு) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில், அதே வழியாக திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
ரயில் எண். 07333 - ஹூப்ளியில் இருந்து செப். 13 காலை 6.55 மணிக்கு புறப்படும் ரயில், அர்சிகெரே, பங்காரப்பேட்டை, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07334 கொச்சுவேலியில் இருந்து செப். 14 பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளியை மறுநாள் 12.50-க்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தீபாவளி, ஆயுதப் பூஜை சிறப்பு ரயில்கள்
ரயில் எண். 06071 - கொச்சுவேலியில் இருந்து நிஜாமுதினுக்கு செப். 20, 27, அக். 4, 11, 18, 25, நவ. 1, 8, 15, 22, 29 தேதிகளில்(வெள்ளி) பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில், கோட்டயம், கோவை, காட்பாடி, விஜயவாடா, நாக்பூர், குவாலியர் வழியாக நிஜாமுதினுக்கு ஞாயிறுதோறும் இரவு 8.40 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 06072 - நிஜாமுதினில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை பகல் 12.53 மணிக்கு சென்றடையும்.
இதையும் படியுங்கள் : NeoMax வழக்கு | விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ரயில் எண். 06077 - சென்னை சென்ட்ரலில் இருந்து செப். 21, 28, அக். 5, 12, 19, 24, நவ. 2, 9, 16, 23, 30 தேதிகளில்(சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, புவனேஷ்வர், பாலசோர் வழியாக சந்திராகாஜிக்கு திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தத்தில் ரயில் எண். 06073 - சந்திராகாஜியில் இருந்து திங்கள்கிழமைகளில் காலை 10 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 3.30 மணிக்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு நாளை(செப்.12) காலை 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.