GOLD RATE | தங்கம் விலை மேலும் குறைவு - இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை தினமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97ஆயிரத்து 600 என்ற உச்சத்துக்கு சென்றது. மீண்டும் அதே மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.88ஆயிரத்து 600 என்ற நிலைக்கு வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,020-க்கும், சவரன் ரூ.96,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.