For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Olympics 2024 : எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர்?

12:28 PM Jul 26, 2024 IST | Web Editor
olympics 2024   எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர்
Advertisement

ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் எந்தெந்த போட்டிகளில் எத்தனை இந்தியர்கள் பங்கேற்கின்றனர் என்கிற பட்டியல் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும்.  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டிகள் இன்று முதல்  ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.

முன்னதாக ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், தற்போது இறுதிக்கட்டமாக பாரீஸ் நகரங்களில் வலம் வருகிறது. இந்த ஒலிம்பிக் ஜோதி இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இணைந்து அந்த ஜோதி ஓட்டம் நிறைவுபெறும். இதனைத் தொடர்ந்து  பிரம்மாண்ட தீபத்தை ஏற்றப்பட்டு போட்டி நடைபெறும் 17 நாள்களும் அந்த பிரம்மாண்ட தீபம் அணையாமல் எரியும்.

பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில்  200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  இதில் இந்தியாவின் சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் இன்று  ஒலிம்பிக்ஸ் போட்டியின் துவக்க விழா கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11மணி அளவில் நடைபெற உள்ளது.

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை;

  • குத்துச்சண்டை 6
  • மல்யுத்தம் 6
  • கோல்ஃப் 4
  • டென்னிஸ் 3
  • செயிலிங் 2
  • நீச்சல் 2
  • குதிரையேற்றம் 1
  • ஜூடோ 1
  • துடுப்புப் படகு 1
  • பளுதூக்குதல் 1
  • தடகளம் 29
  • துப்பாக்கி சுடுதல் 21
  • ஹாக்கி 19
  • டேபிள் டென்னிஸ் 8
  • பாட்மின்டன் 7
  • வில்வித்தை 6

இவர்களில் ஆண்கள் 70 பேரும் பெண்கள் 47பேரும் என மொத்தமாக 117பேர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். மேலும் இந்த வீரர் , வீராங்கனைகளுக்கு 140 துணைப் பணியாளர்களும் பாரீஸ் சென்றுள்ளர்.  இந்தியர்கள் மொத்தம் 16 விளையாட்டுகளில், 69 பதக்கப் பிரிவுகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement