For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

OBC என்றால் 'ஒன்லி பிசினஸ் கிளாஸ்’ மட்டும் தான்” - மோடியை விமர்சித்த ராகுல் காந்தி!

01:57 PM Feb 09, 2024 IST | Web Editor
obc என்றால்  ஒன்லி பிசினஸ் கிளாஸ்’ மட்டும் தான்”   மோடியை விமர்சித்த ராகுல் காந்தி
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் வகுப்பை சேர்ந்தவர் எனக் கூறியதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவும், எம்.பி. ராகுல் காந்தியும் விமர்சித்து வருகின்றனர். 

Advertisement

இதுகுறித்து மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்ததாவது;

இப்போது எல்லாம் மோடி அவர்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் சமூக நீதிக்கான பாடத்தை கற்பித்து வருகிறார்.  அவர்களின் சாதிக்கு ஓபிசி அந்தஸ்து கிடைத்தது.  அவர் தன்னை "மிகப்பெரிய OBC" என்றும் அழைக்கத் தொடங்கினார்.  மோடி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தாமல் ஓபிசி பிரிவின் அந்தஸ்தைப் பெற்றார்.  ஆனால், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.  நாட்டில் இதுபோன்ற பல பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன.

அவர்கள் சாதிக் கணக்கெடுப்புக்கு மோடியின் எதிர்ப்பால் OBC அந்தஸ்தைப் பெற முடியாது.  மகாராஷ்டிரா,  ஹரியானா மற்றும் குஜராத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சாதிக்கு ஓபிசி அந்தஸ்து பெறுவதற்காக பல ஆண்டுகளாக வீதியில் இறங்கி உள்ளனர்.  ஓபிசியின் உலகத் தலைவராக மோடி! ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று கூறவாரா? சமூகநீதியை நடைமுறைப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியமானது.  சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றி,  ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சூட் அணிந்து,  ரூபாய் 1.5 லட்சம் மதிப்புள்ள பேனாவால் எழுதும் மோடிக்கு OBC என்றால் - 'ஒன்லி பிசினஸ் கிளாஸ் மட்டும் தான்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களால் ஒருபோதும் நீதி வழங்க முடியாது. தேர்தலுக்காக சான்றிதழில் OBCக்கள் ஆனவர்கள்,  தங்கள் ஆட்சி நாட்களை எண்ண வேண்டியது தான்.  சாதிக் கணக்கை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.  தமது நண்பர்களுக்கு" நாட்டின் செல்வத்தால் நிரப்பப்பட்ட கருவூலம்,  இளைஞர்களுக்கு 'வேலையில்லா திண்டாட்டம்' என்ற நோய் கொடுத்தவர்தானே மோடி.  மோடி பிறப்பால் அல்ல,  அவர் 'பேப்பரால் OBC'. அவர் பிறந்து 50 ஆண்டுகள் வரை அவர் OBC ஆக இருக்கவில்லை.  என்னுடைய இந்த உண்மையை உறுதி செய்த பாஜக அரசுக்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement