Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!

04:15 PM Nov 10, 2023 IST | Student Reporter
Advertisement

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் காற்றின் மாசு தரம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் அறுவடைக்கு பின் இருக்கும் வைக்கோல் எரிக்கப்படுவதாலும்,  வாகனத்தில் இருந்து வெளியேற்றப்படும் புகையாலும் டெல்லியில் காற்றின் மாசு அடைகிறது.

அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதனால் காற்று மாசு ஓரளவு குறைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!

காற்று மாசுப்பட்டை கட்டுப்படுத்த சுற்றுசூழல்த்துறை அமைச்சர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில்,  ஓற்றைப்படை-இரட்டைப்படை பதிவுஎண் முறையிலான வாகன இயக்கத்துக்கான விதி அமல்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும்,  டெல்லியில் மழையின் காரணமாக காற்றின் தரக்குறியீடு மேம்பட்டுள்ளதால் , தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சூழ்நிலையை ஆராய்ந்து இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒற்றைப்படை-இரட்டைப்படை பதிவுஎண் முறையிலான வாகன இயக்கத்துக்கான விதி அமல்படுத்தும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுசூழல்த்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Tags :
Air pollutioncontrolrulesDelhiNovemberpostponementVehicle
Advertisement
Next Article