Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சுவாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மறுப்பு!

07:44 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

“சுவாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை”  என  ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லி முதல அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  டெல்லி அரசியலில் பேசுபொருளாக உள்ளது.  இது தொடர்பாக  ஆம் ஆத்மி கட்சி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ ஸ்வாதி தாக்கப்படுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோ என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.

 அந்த விடியோவில் ஸ்வாதி மாலிவால் முதலமைச்சரின் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது ஈடுபடுவது போன்றும் தன்னை டிசிபி மற்றும் சிவில் காவல் அதிகாரியிடம் பேசவிடுமாறு அவர்களிடம் ஸ்வாதி கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மேலும், அவர் ஏற்கெனவே காவலர்களுடன் பேசியதாக சொல்வதாகவும் பின்னர் பணியாளர்களில் ஒருவரை வேலை விட்டு நீக்குவதை தான் காண்பேன் என சொல்வதும் அந்த விடியோவில் கேட்கிறது.

இந்த விடியோ குறித்து ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் பக்கத்தில் “எப்போதும் போல அரசியல் கயவர்கள் தன்னை காத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள்.  தனது தரப்பு ஆட்கள்  மூலம் டிவீட்  பதிவிடுவதும் எந்தவித பொருளுமற்ற விடியோவை பகிர்வதன் மூலமும் தான் செய்த குற்ற செயல்களில் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும் என நினைக்கிறார்.  அவரது வீடு மற்றும் அறையின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தாலே உண்மை தெரியவரும். எந்த எல்லை வரை செல்ல முடியுமோ செல்லுங்கள், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருக்கிறார். உலகத்தின்முன் ஒரு நாள் உண்மை வெளியே வரும்" என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியும் டெல்லி அமைச்சருமான அதிஷி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

“ டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்ததிலிருந்து பாஜக பல்வேறு வகைகளில் அவருக்கு இடையூறு செய்து வருகிறது. சுவாதி மாலிவால் எந்த முன் அனுமதியும் இன்றி முதலமைச்சர் இல்லத்திற்கு வந்து அவரை பார்க்க வேண்டும் என பிரச்னை செய்தார். சுவாதி மாலிவால் எஃப்ஐஆரில் கூறியிருப்பது போன்று எதுவும் நடக்கவில்லை முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே சுவாதி இதுபோன்று செய்து வருகிறார்.” என அதிஷி தெரிவித்தார்.

Tags :
Aam AadhmiAAPArvind KejriwalAthishiDelhiSwathi Maliwal
Advertisement
Next Article