For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீடா அம்பானியின் மரகத நெக்லஸ்... இவ்வளவு தானா? வைரலாகும் பதிவு!

12:56 PM May 27, 2024 IST | Web Editor
நீடா அம்பானியின் மரகத நெக்லஸ்    இவ்வளவு தானா  வைரலாகும் பதிவு
Advertisement

ஆனந்த் அம்பானியின் முன் திருமண கொண்டாட்டத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் வெறும் 178 ரூபாய்க்கு கிடைக்கும் என பதிவிடப்பட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. 

Advertisement

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழா,  3 நாட்கள் குஜராத்தின் ஜாம்நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் விஐபிக்கள் பலரும் பங்கேற்றனர். பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள்,  சச்சின்,  தோனி,  ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் என பெரும் பட்டாளமே அம்பானி வீட்டு இல்ல நிகழ்வில் பங்கேற்றது.  விழாவும் ஆடல், பாடல் என அசத்தலாக நடைபெற்றது. வெறும் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூ. 1,250 கோடி செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த விழாவில் முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  காரணம் கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுர பட்டுப்புடவையும், மரகத கற்களால் ஆன ரூ.500 கோடி மதிப்பிலான நெக்லஸும் அணிந்திருந்தார்.  இந்த ரூ.500 கோடி மதிப்பிலான நெக்லஸ் அப்போது பெரும் பேசுபொருளானது.  இந்நிலையில் நீடா அம்பானி அணிந்திருந்த நெக்லஸ் வெறும் 178 ரூபாய்க்கு கிடைக்கும் என விற்பனையாளர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஜுவல்லர்ஸ் ஷாப்  வைத்திருக்கும் நபர் ஒருவர் நீடா அம்பானியின் நெக்லஸ் போன்ற கவரிங் நெக்லஸ்களை விற்பனை செய்கிறார்.  இதற்காக இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  மேலும் மொத்தம் மட்டுமே சில்லறை வியாபாரம் கிடையாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது 10  லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Tags :
Advertisement