For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. இன்ஸ்டாவிலும் சாதனை படைத்த கிங்... கோலி!

09:35 PM Jun 30, 2024 IST | Web Editor
கிரிக்கெட்டில் மட்டுமல்ல   இன்ஸ்டாவிலும் சாதனை படைத்த கிங்    கோலி
Advertisement

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி தற்போது இன்ஸ்டாகிராம் பதிவிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

Advertisement

20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.

தொடர் முழுவதுமே சரியாக விளையாடாத விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பின்னர் 177ரன்கள் இலக்கோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் முதல் முறையாக இறுதிபோட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகால கனவை நினைவாக்கியது இந்தியா. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகான இந்தியாவின் இந்த வெற்றியால் நாடே ஆனந்த கண்ணீரில் மூழ்கியது. வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வை ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்..  "இதைவிட சிறந்த நாளைக் கனவில்கூட கண்டிருக்க முடியாது. கடவுள் மிகப் பெரியவர், நன்றியுடன் தலை வணங்குகிறேன். இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். ஜெய்ஹிந்த்..!" எனக் குறிப்பிட்டிருந்தார்.  இந்தப் பதிவுக்கு 1 கோடியே 64 லட்சத்துக்கும் அதிமான லைக்குகள் பதிவாகியுள்ளன.

விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை 26 கோடிக்கும் மேல் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில்  இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்பட்ட பதிவு, வேகமான 10 லட்சம் லைக்குகள் பெற்ற பதிவு, அதிவேக 50 லட்சம் லைக்குகள் பெற்ற பதிவு, ஆசியாவிலேயே அதிவேக 50 லட்சம் லைக்குகள், ஆசியாவில் அதிகம் பின்தொடர்பவர்கள் போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னதாக நடிகை கியாரா அத்வானியின் திருமணப் பதிவுக்கு 1 கோடியே 62 லட்சம் லைக்குகள் வந்ததே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Tags :
Advertisement