For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காசிமேடு மீன்பிடி சந்தையில் களைகட்டிய மீன்கள் விற்பனை..!

08:48 AM Jun 16, 2024 IST | Web Editor
காசிமேடு மீன்பிடி சந்தையில் களைகட்டிய மீன்கள் விற்பனை
Advertisement

விடுமுறை நாளில் மீன்களை வாங்க அதிகாலை முதலே காசிமேட்டில் மீன் சந்தையில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

Advertisement

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க வளர்ச்சி காரணத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜீன்
15 வரை மீன்பிடி தற்காலமானது கடைபிடிக்கப்பது வழக்கம். இந்த கால கட்டத்தில்
விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் 61 நாட்கள் இருந்து வந்த
நிலையில் நேற்று இந்த தடை காலமானது முடிவடைந்த நிலையில் விசைப்படகு
உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களுக்குத் தேவையான ஐஸ் மற்றும் பொருட்களை வாங்கி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் இன்று ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் இன்று அதிகாலை கரைக்குத் திரும்பினார். கிட்டத் தட்ட 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேடு மீன்பிடி வார்ப்பில் ஏல முறையில் மீன் விற்பனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு இரண்டு மணி அளவில் ஏல முறையில் தொடங்கிய இந்த விற்பனையில் சென்னையின் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு மீன் சந்தை பகுதிகளில் கடை வைத்திருக்கக் கூடிய பெரு வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் என பலரும் இன்று வந்திருந்தனர்.

மீன்களின் விலையைப் பொறுத்தமட்டில் வஞ்சிரம் வவ்வா கொட்டா நாயாறல்
பெரிய வகை சங்கரா கடமான் நண்டு இறால் போன்ற மீன்களின் விலை அதிகரித்தும், கானாங்கத்தை முளியான பாறை கவலை போன்ற சிறியவகை மீன்கள் விலை குறைந்தும்
காணப்பட்டது.

அடுத்த வரக்கூடிய நாட்களில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச் சென்று பெரிய
வகை மீன்களைப் பிடித்து வரும் நிலையில் பொதுமக்கள் வியாபாரிகள் எனப் பலரும்
கூட்டமாக காசிமேடு மீன் விற்பனை ஏலங்கூட பகுதிக்கு ஆர்வமுடன் வந்து தேவையான
மீன்களை வாங்கி செல்வதை காணமுடிந்தது.

Tags :
Advertisement