“தவெக அழைப்புக்கு இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள்” - செல்வபெருந்தகை பிரத்யேக பேட்டி!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை , நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா கூட்டணி கடந்த தேர்தலை விட பெரூ வாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்று பெறுவோம். கருத்து கணிப்பில் இந்தியா கூட்டணி 5 சதவீத வாக்குகள் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க முடியும் என பேசியிருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு.
கல்வி என்பது பொது பட்டியலில் இருக்கிறது. மாநில பட்டியலிலோ மத்திய அரசின் பட்டியலிலோ இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்காத பாஜக அரசு தொடர்ந்து இது போன்ற சர்வாதிகார செயலில் ஈடுபட்டு வருகிறது.
நமக்கு அளிக்க வேண்டிய பணத்தை அவர்கள் நிச்சயம் கொடுத்தாக வேண்டும்.
தவெக தலைவர் விஜய்க்கு y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஒரு அரசியல் தான்.
ஆனால், பாஜக தமிழ்நாட்டில் ஒருபோதும் கால் ஊன்ற முடியாது. கடந்த முறையும் சித்து விளையாட்டு ஆடியதுபோல் தற்போது அதிமுகவை சீர்குலைக்கலாமா அல்லது தவெகவை இழுக்கலாமா என விளையாடுகின்றனர். தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராக அவர்கள் செய்யும் ஒவ்வொரு
செயலும் மக்களுக்கு எதிரான செயல். இந்தியா கூட்டணி மக்களுக்கான கூட்டணி அதனால் தவெக விடுக்கும் அழைப்புக்கு யாரும் செல்ல மாட்டார்கள்”
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.