For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராமர் கோயிலை புறக்கணித்து நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது - அமித்ஷா பேச்சு!

07:47 PM Feb 10, 2024 IST | Web Editor
ராமர் கோயிலை புறக்கணித்து நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது   அமித்ஷா பேச்சு
Advertisement

ராமர் கோயில் இயக்கத்தை புறக்கணித்து இந்த நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (பிப். 10) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். தொடர்ந்து, தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது அவர், “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பால் நீண்டகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் இயக்கத்தை புறக்கணித்து இந்த நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது. 1528-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்துள்ளது. ஜனவரி 22, வரும் ஆண்டுகளில் ஒரு வரலாற்று நாளாக இருக்கும்.

ராமர் கோயில் திறக்கப்பட்ட மகிழ்ச்சி நாடு முழுவதும் பரவுயுள்ளது. ராமர் கோயில் இயக்கத்தை புறக்கணித்து இந்த நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது. 1528ல் இருந்து ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்துள்ளது. இந்த விவகாரம் நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. மோடி ஆட்சியில் இந்த கனவு நிறைவேறியுள்ளது” என்று கூறினார்.

Tags :
Advertisement