Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நடிகர் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" - நடிகர் ஜெயம் ரவி

03:25 PM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

"நடிகர் விஜய்யின் இடத்தை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது" என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 

Advertisement

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில்,  நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சைரன்' திரைப்படம் இன்று (பிப்.16) தமிழ்நாடு முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.  இத் திரைப்படத்தை சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் யோகி பாபு,  சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள திரையரங்கில்  'சைரன்' திரைப்படத்தை காண நடிகர் ஜெயம் ரவி சென்றிருந்தார்.  அப்போது அவரை ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்றனர்.  மேலும் அவர் ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படத்தை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது:

"மதுரை மண்ணை தொட்ட உடனே ஒரு புத்துணர்ச்சி வந்துள்ளது.  முதன்முறையாக ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  படம் சிறப்பாக வந்துள்ளது.
மல்டி ஸ்கிரீன் இருப்பதால் ஒரு படம் 40 ஷோ போட முடிகிறது.  இதில் யாருக்கும்
லாஸ் ஆகவில்லை.  கலெக்ஷன் சரியாக வருகிறது.  ரசிகர் மன்ற கட்டிடம் கண்டிப்பாக கட்டப்படும்.

எனக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை.  நடிகர் விஜய்யின் இடத்தை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது.  தனி ஒருவன் 2 திரைப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது."

இவ்வாறு நடிகர் ஜெயம் ரவி தெரிவித்தார்.

Tags :
GV Prakash Kumarjayam raviKeerthy SureshMaduraisirenYogi Babu
Advertisement
Next Article