Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இனி ரகசியம் இல்லை... சொத்து விவரங்களை வெளியிடும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் - காரணம் என்ன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
05:31 PM Apr 03, 2025 IST | Web Editor
Advertisement

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் தங்கள் முழு சொத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர ஒப்புக் கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சொத்துக்களின் மதிப்பை வெளியிடுவது அவர்களின் சுய முடிவாக இருக்கும் என்றும், வெளியிடப்பட்ட அனைத்து தரவுகளும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமிருந்து ஏன் இந்த திடீர் வெளிப்பாடுகள்?.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் அவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையை நீதிபதிகள் உறுதி செய்கின்றனர்.

Tags :
assetsCJI Sanjiv KhannaCourt websiteSupreme Court judges
Advertisement
Next Article