Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் சரி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர்!

இந்தி முட்டாள் மொழி என்று சொல்லவில்லை அந்த அந்த மாநிலத்திற்கு மாநில மொழி முக்கியம்.
12:42 PM Jul 28, 2025 IST | Web Editor
இந்தி முட்டாள் மொழி என்று சொல்லவில்லை அந்த அந்த மாநிலத்திற்கு மாநில மொழி முக்கியம்.
Advertisement

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவி லைலா ரவிசங்கர் தலைமையில் திருத்துவபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மகளிர் அணி தலைவி ஹசீனா சையத் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,

Advertisement

பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பெண்களை முன்னிலைப்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் தாரகை மந்திரம் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் முதல் பெண் ஜனாதிபதி முதல் பெண் லோக் சபா சீப்கர் முதல் பெண் கவர்னர் பஞ்சாயத்து ராஜ் சம பங்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு பங்கு கொடுத்தது காங்கிரஸ்.

தற்போது ஆட்சி செய்து கொண்டு இருக்கும் பாஜக அரசு பெண்களுக்கு எதிரான அரசு பட்டியலினத்தவரை, சிறுபான்மையினரை பெண்களை ஒதுக்க கூடிய அரசாக உள்ளது என்பதுதான் உண்மை. மணிப்பூர் என பல மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பிரச்சனை பற்றி ஏன் பாஜக தேசிய மகளிர் அணி பொறுப்பாளர் வானதி சீனிவாசன் விலை வாசி உயர்வால் பெண்கள் படும் துயரத்தை பேசி இருக்கிறாரா, இல்லை தமிழிசை ஜாதி மதத்தை பற்றி பேசுவார். அண்ணா பல்கலைக்கழ பிரச்சினை பேசினார்.

இந்திய அளவில் பெண்கள் மக்களுக்காக பிரதிநிதுத்துவத்தை முன்னிறுத்தி தெருமுனை முதல் பாராளுமன்றம் வரை ராகுல் காந்தி தலைமையில் போராட்டங்கள் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி தமிழக மகிளா காங்கிரஸ் பெண்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. தேர்தலில் பூத் அளவில் எவ்வாறு பணியாற்றுவது குறித்த பயிற்சியாளர்கள் மண்டல வாரியாக நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மோடி எத்தனை முறை தமிழகத்தில் வந்தாலும் சரி ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை தமிழக மக்கள் தமிழ் தமிழ் நாடு என்ற கொள்கை பிடிப்போடு உள்ளவர்கள், நாம் நம்மை அவர்கள் பித்தர் ஆக்கி விட முடியாது. அந்த அந்த மாநிலத்திற்கு ஏற்றார் போல் உணர்வுகள் இருக்கும் வரை எக்காரணம் கொண்டும் பாஜக நம்மை தொட்டு பார்க்க முடியாது அசைத்தும் பார்க்க முடியாது ஏன் என்றால் தமிழ்நாட்டு வேறு விதமான சூழல். எனவே தான் இந்தியை நம்மீது அடிக்கடி மோடி அரசு இந்தியை திணிக்கிறது அப்படி இந்தியை திணித்தால் வட இந்தியாவை போல மூளை சலவை செய்யலாம் அதற்காக அவர்கள் தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அது எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அது நிறைவேறாது.

அதுபோலவே மத மாவ சக்தியான பாஜகவை காலூன்ற காரணமாக இருக்கும் எடபாடியையும் அதிமுகவையும் தமிழக மக்கள் மன்னிக்க போவதில்லை தேசிய குற்ற நிகழ்வுகள் குறித்த ஆய்வு அறிக்கை படி தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என நான் சொன்னால் நாங்கள் கூட்டணியில் இருப்பதால் கூறுவதாக நீங்கள் கூறாமலாம் ஆய்வு அறிக்கை எடுத்து பாருங்கள் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி காந்திய கொள்கை கொண்டது நாங்கள் என்றுமே சாராயத்தை விரும்பியது கிடையாது சாரயத்திற்கு எதிரான போராட்டமாகதான் எங்கள் போராட்டம் இருக்கும் இதுதான் எங்கள் கொள்கை. மக்களிடன் அடிப்படையான உப்பை வைத்து உப்பு சத்தியாக்கிரகம் செய்த இயக்கம் எங்கள் இயக்கம்.

நாங்கள் நான்கு வருடங்களாக மது கடை மூடாதது குறித்த செய்திகள் கேள்விக்கு கூட்டணி கட்சியான திமுக உட்பட பேசிய கனிமொழியிடம் கேளுங்கள் என்று பதில் கூட்டணி வேறு கொள்கை வேறு டாஸ்மாக் காரணமாக ஏதாவது பெண் விதவை ஆனால் சொல்லுங்கள் நான் வந்து போராடுவேன் போராட விட்டால் கேளுங்கள் என்றும் கண்டிப்பாக ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்போம் மதுவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம் 33சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராடுவோம் அதை பெற்று தர சட்டமன்ற குழு தலைவர் முனைப்பாக இருந்து செயல்படுவார்.

இந்தி முட்டாள் மொழி என்று சொல்லவில்லை அந்த அந்த மாநிலத்திற்கு மாநில மொழி முக்கியம் உபியில் ஏன் சமஸ்கிருத மொழியை திணிக்க வில்லை அங்கு அனைவருக்கும் இந்தி தெரிகின்றது. அதை மக்கள் ஏற்று கொள்கிறார்கள்.

தமிழ்நாடு வரும் போது திருக்குறளை பேசுகின்றீர்கள் உலக அளவில் கலாச்சார ரீதியாக திருக்குறளை உயர்ந்து வீரர்கள் என்று கூறி இருக்கிறீர்கள் என்ன செய்தீர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வந்த போது பேசாத மோடி கையில் பாஜக சின்னம் எடுத்து கொண்டு பிரச்சார வாகனத்தில் சென்றார் அவரை பேச விட்டால் அவர் மூளை சலவை செய்வார் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

அது போல செய்தியாளர்களை சந்திக்க மாட்டார் தேர்தல் நேரம் வந்தால் மக்களிடம் சென்று பொய் பேசுவார். மக்களுக்கு அது புரியாமல் இருப்பது நல்லது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பொறுப்புக்களில் இருந்த மூன்று முறை சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணிக்கு பாஜக பொறுப்பு கொடுக்காமல் ஒதுக்கியது என்று பேட்டியில் அவர் தெரிவித்தார்.

Tags :
CongresshindiKANNIYAKUMARIPMModiTamilNaduWomenSafty
Advertisement
Next Article