Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இதுவரை அழைப்பு வரவில்லை" - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

08:40 PM Jun 08, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை  எதிர்க்கட்சியான  காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.   இதில் பாஜக மட்டும் 240 இடங்களை பெற்ற நிலையில்,  ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டது.  இதனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம்  உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நாளை (ஜூன் 9) மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

மத்தியில் மோடி 3.0 அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.  கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக, இம்முறை பெறவில்லை.  எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.  இது மோடிக்கு புதிய அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்விற்கு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  விருந்தினர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்கள் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போடப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த நிலையில்,  பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து பேசுகையில்,  “பதவியேற்பு விழாவுக்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  எங்கள் கூட்டணி தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.  இந்தியா கூட்டணித் தலைவர்கள் அழைப்பிதழ் பெறும்போது,  நாங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து ஆலோசிப்போம்” என்றார்.

Tags :
BJPCongressElection2024Elections ResultsElections Results2024Elections2024jairam rameshLok Sabha ElectionLok Sabha Election2024
Advertisement
Next Article