மகள் இல்லையே என நினைக்காதீர்கள்...மகனாக எப்பொழுதும் நான் இருப்பேன் - ஆயி அம்மாளை நெகிழ வைத்த அமைச்சர்!
அம்மா உங்களுக்கு மகள் இல்லை என்று நினைக்காதீர்கள், மகனாக எப்பொழுதும் இந்த அன்பில் மகேஸ் பொய்யா மொழி இருப்பேன் என்று ஆயி அம்மாளுக்கு அமைச்சர் வாக்கு கொடுத்தார்.
மதுரையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் நம்ம ஊரு, நம்ம ஸ்கூல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இதையடுத்து, நிகழ்ச்சியில், கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்காக ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரை ஒத்தகடையை சேர்ந்த ஆயி என்ற பூரணம்மாள் மற்றும் ரூ.20 லட்சம் பள்ளிக்கு கொடையாக வழங்கிய பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
இதையும் படியுங்கள் ; I.N.D.I.A. கூட்டணியிலிருந்து நிதீஷ்குமார் விலகிய நிலையில் பீகாருக்குள் நுழைந்த ராகுல்காந்தி நடைபயணம்!
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது;
"என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள். 20 லட்சம் ரூபாயை நன்கொடையை வழங்கிய பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மற்றும் ரூ.7.5 கோடி மதிப்பில் உள்ள இடத்தை வழங்கி இருக்கிறார் எங்கள் அம்மா ஆயி என்கிற பூரானம்மாள். அம்மா உங்களுக்கு மகள் இல்லை என்று நினைக்காதீர்கள், மகனாக எப்பொழுதும் இந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருப்பேன்.
தொழிலதிபர் வேணு சீனிவாசன் 2500 கிராமங்களை தத்து எடுத்து இருக்கிறார், எனது கிரமமான அன்பில் கிராமத்தையும் அவர் தான் தத்து எடுக்கிறார். வேணு சீனிவாசன் சிறு
வயதில் தூரத்தில் நின்றும் போட்டோவிலும் பார்த்து இருக்கிறேன். இன்று அவர்
அருகில் இருப்பது எனது பாக்கியம். மேலும், நமது பள்ளி , நமது ஊரு பள்ளி திட்டத்திற்கு உதவ வேண்டும்"
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.