"பத்திரப்பதிவுத் துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை" - அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இருக்கக்கூடிய பாரதியார் ரோடு பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பூமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுக ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை படிப்படியாக செய்து வருகிறோம். குடிநீர் இணைப்பு முடிந்தவுடன் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது ஜெய்ஹிந்த்புரம் பழங்காநத்தம் மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வரும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அடிப்படை தேவைகளும் அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. மேற்குத் தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறிய நிலையில் என்னை பொறுத்தவரை கிழக்கு தொகுதி தான் இருந்தாலும் அனைத்து தொகுதிகளும் எடப்பாடியார் பிரசாரத்தின் போது தெரிவித்தார். பதிவு துறையில் ஒரு பத்திரத்திற்கு 10 சதவீதம் புறப்படுவதாக 10% பெற்றார்கள் என்றாலும் அவர்தான் அதைக் கூற முடியும்.
பொதுமக்கள் மட்டுமல்ல அவர்களது கட்சி சார்ந்தவர்களும் பதியத்தான் செய்கிறார்கள். எந்த பத்திர அலுவலகத்தில் பத்து சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் கூற வேண்டும். கடந்த கால ஆட்சிகளிலே நடைபெற்ற போது பத்திரப்பதிவு துறையில் எவ்வளவு சீக்கிரம் பதியப்பட்டது என்பதை கூற வேண்டிய காலகட்டம் வந்தால் நிச்சயம் நான் கூறுவேன்.
சிபிஐ வழக்குகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் அது குறித்து விரிவாக நான் சொல்ல விரும்பவில்லை. எந்த வருடம் எந்தெந்த இடங்கள் பத்திரம் பதிவு நடைபெற்றது என்பது குறித்த விபரங்கள் என்னிடம் இருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த நிலமும் இதுபோன்று பதிவு செய்யப்படவில்லை எந்த ஒரு சார்பு பதிவாளர்களோ தவறு செய்திருந்தால் சுட்டிக் காட்டினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காக இதை வேண்டுமானாலும் சொல்ல வேண்டும் என்று சொல்லக்கூடாது.
எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் எந்த கட்சி நிகழ்ச்சி நடத்தினாலும் நாங்கள் கண்டு கொள்வது கிடையாது நடுரோட்டில் நின்று தான் பேசினார்கள் நாங்கள் எதையுமே கண்டு கொள்வதில்லை. தற்போது மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வதற்கு மக்களுக்கு வந்து கொண்டிருக்கிறோம் செய்து கொண்டிருக்கிறோம். கலைஞர் உரிமைத் தொகை கொடுத்திருக்கிறோம். தகுதி உள்ளவர்களுக்கு விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
அரசியலை பேசுவது முக்கியமல்ல அதை செயலில் காட்ட வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன முடிவு என்பதை நீங்கள் பாருங்கள். நாங்கள் எந்த பில்டப்பும் செய்வது கிடையாது. செல்லூர் ராஜு பணம் போனதற்கு மூர்த்திதான் சப்போர்ட் செய்து என்று சொல்கிறார்கள் நான் எந்த காவல் நிலையம் சென்றேன் அவர் அவர் வேலையை பார்க்கிறார் நான் என் வேலையை பார்க்கிறேன்.
எங்கள் வேலைகளை பார்ப்பதற்கு எங்களுக்கு நேரம் பத்தவில்லை. தாங்கள் அந்த வேலைகளை பார்த்து வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற பணிகளுக்கும் இப்போது நடைபெறக்கூடிய பணிகளை ஒப்பிட்டு பாருங்கள். எந்த தேதியில் என்ன செய்தோம் என்று எந்தப் பகுதியிலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தவறான எந்த ஒரு பத்திரமும் பதிவு செய்யப்படவில்லை. அதிகாரிகள் எதாவது தவறு செய்யப்பட்டு இருப்பது எனது கவனத்திற்கு வந்தால் உடனடியாக அன்றைய தினமே நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.