For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை"

01:02 PM Jan 11, 2024 IST | Web Editor
 வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு b ed படிப்புகளுக்கு அனுமதி இல்லை
Advertisement

இனி 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி கிடையாது, B.Ed படிப்புகள் 4 ஆண்டுகள் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்து உள்ளது.

Advertisement

இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து விட்டு, B.Ed பயிலும் மாணவர்களின் வசதிக்காகவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிக கல்விக்கொள்கை 2020யின்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) அறிவித்திருந்தது.

இந்நிலையில், சிறப்பு கல்வி உட்பட 2023-24 கல்வியாண்டில் இருந்து B.Ed 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுவதாகவும், 2 ஆண்டு B.Ed .படிப்புக்கு அனுமதி வழங்குவது நிறுத்தம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 2024-ம் ஆண்டில் 50 நாடுகளில் தேர்தல்!

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020யின் படி, "தேசிய ஆசிரியர் கவுன்சிலில் புதிய பயிற்சி திட்டத்தை விரைவில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், 2 ஆண்டு B.Ed இயங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மாட்டாது.

தேசிய ஆசிரியர் கவுன்சிலிங் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகளுக்கு B.Ed படிப்பை நடத்த விரும்பும் கல்லூரிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இதற்கான போர்ட்டல் திறக்கப்பட்டதும் புதிய கல்வி அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement