ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... சேரனின் ’ஆட்டோ கிராப்’ ரீரிலீஸ் தேதி அறிவிப்பு..!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
சேரன் கடந்த 2004ல் ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் இளமை பருவக் காதல் அனுபவங்களை சேரன் அழகாக காட்சி படுத்தியிருப்பார். 2004 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரிலீசான ஆட்டோகிராப் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.
இந்த நிலையில், இப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் கழித்து வௌகிற நவம்பர் 14 ஆம் தேதி மறுவெளியீடாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
