Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை - டி.ஆர்.பாலு பேட்டி!

05:20 PM Jan 28, 2024 IST | Web Editor
Advertisement

நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. இந்தி பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் குமார் கூறினார் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Advertisement

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர்.

அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையேயான பேச்சு வார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அண்ணா அறிவாலயம் வந்தடைந்தது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:

“அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 9-ம் தேதிக்கு பின்னர் நடைபெறும். நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் ஒன்றுமே இல்லை, இந்தி பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் குமார் கூறினார். அப்போது கூட கூட்டணிக்காக அமைதியாக இருந்தோம்.  பிரதமராக வேண்டும் என்று நிதிஷ் குமார் தெரிவிக்கவில்லை

எல்லா கட்சியும் அதிகமான இடங்களில் நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். திமுக கூட 40க்கு 40 தொகுதிகளும் நிற்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். கூட்டணி என்று வந்தால் தொகுதிகளை பிரித்து தான் போட்டியிட வேண்டும். திமுகவும் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிற்க வேண்டும் என்று தான் என்னுடைய விருப்பம். இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறியது தவறு கிடையாது.

நிச்சயமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன். திமுகவுடன் எந்த கட்சி வேண்டுமானாலும் இணைய வரலாம்” இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

Tags :
CongressDMKElectionINCks alagiriNews7Tamilnews7TamilUpdatesParliament ElectionTamilNaduTR balu
Advertisement
Next Article