இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்' செயற்கைகோள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை உருவாக்கியது.
ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் உள்ள 02-வது ஏவு தளத்தில் இருந்து இன்று மாலை 05.45 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணியான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் இன்று விண்ணில் பாயவுள்ளது. அதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு செப்.30ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் பின்னர், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன. அதன்படி, இஸ்ரோ நாசா இணைந்து தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோளில் இரண்டு முக்கிய ரேடார் தொழில்நுட்பங்கள் உள்ளன. இவை இரண்டும் இணைந்து பூமியின் மேற்பரப்பை மிக விரிவாகவும், நுணுக்கத்துடன் படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.