For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைவராக நினா சிங் நியமனம்!

07:55 AM Dec 30, 2023 IST | Web Editor
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் முதல் பெண்  தலைவராக நினா சிங் நியமனம்
Advertisement

வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் என்ற பெண் அதிகாரி  நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மணிப்பூர் கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் மத்திய துணை ராணுவப் படைகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையின் தலைவராக  உளவுத்துறை அதிகாரி ராகுல் ரஸ்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அனிஷ் தயாள் சிங் சிஆர்பிஎஃப் பிரிவின் புதிய தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும்,மத்திய தொழில்துறை பாதுகாப்புத் தலைவராக  நினா சிங் நியமிக்கப்பட்டுள்ளர். அப்பதவியை பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் நினா சிங் பெற்றுள்ளார்.

இந்நிலையில், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, விமான நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இது தவிர முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நினா சிங், பீகாரை சேர்ந்தவர். ராஜஸ்தானில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளர்.  நினா சிங் ராஜஸ்தானில் போலீஸ் துறையில் பல்வேறு பதவிகள் வகித்துள்ளார். ராஜஸ்தானில் பெண்கள் கமிஷன் செயலாளராக இருந்தபோது பல்வேறு முக்கியத் திட்டங்களை நிறைவேற்றினார்.

இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் மற்றும் எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

2013 முதல் 2018ம் ஆண்டு வரை சி.பி.ஐ. இணை இயக்குநராகப் பணியாற்றிய நினா சிங், மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு, மற்றும் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கு விசாரணைகளை தன் நேரடிப் பார்வையில் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags :
Advertisement