For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் என்ன? - டெல்லியில் நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!

07:27 PM Jun 07, 2024 IST | Web Editor
காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் என்ன    டெல்லியில் நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
Advertisement

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் குறித்து நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக  தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.  அதனை அடுத்து ஒரு மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  மாலை 5:30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அசோகா ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கான இரவு விருந்து வழங்கப்படுகிறது.

Tags :
Advertisement