For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குழந்தைகளே தயாரித்த தேர்தல் அறிக்கை - முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு தலைவர் சுகிதா சாரங்கராஜ்!

01:29 PM Apr 04, 2024 IST | Jeni
குழந்தைகளே தயாரித்த தேர்தல் அறிக்கை   முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு தலைவர் சுகிதா சாரங்கராஜ்
Advertisement

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குழந்தைகளே தயாரித்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

Advertisement

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது.  மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,  நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.  ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஜூன் 4ம் தேதி,  பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை,  கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து,  பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.  அதேபோல், தேர்தலுக்கான முக்கிய பகுதியாக கருதப்படும் தேர்தல் அறிக்கையையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில்,  திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளன.  மற்ற கட்சிகளும் விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால்,  குழந்தைகள் தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிடுவது என்ற செய்தி மிகவும் சொற்பம்.  அந்த வகையில்,  குழந்தைகளே தயாரித்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி,  பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு தேவையான,  அவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த குழந்தைகளின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.  12 மாவட்டங்களைச் சேர்ந்த 16 குழந்தைகள் அமைப்புகளில் இருந்து 1500 குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு,  அவர்களின் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு,  அவை தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளன.  குழந்தைகள் வைக்கும் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி,  பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு இதனை முன்னெடுத்துள்ளது.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘குழந்தைகளின் தேர்தல் அறிக்கை’  இன்று வெளியிடப்பட்டது.  குழந்தைகள் ஒன்றிணைந்து வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு தலைவர் சுகிதா சாரங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

குழந்தைகளின் தேர்தல் அறிக்கையில்,  நிதி ஒதுக்கீடு மற்றும் கூட்டமைப்பு, உயிர் வாழ்வதற்கான உரிமை,  வளர்ச்சிக்கான உரிமை,  பாதுகாப்பு உரிமை,  பங்கேற்பு உரிமை ஆகிய 5 தலைப்புகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Tags :
Advertisement