For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ்7 தமிழ் மற்றும் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி கண்காட்சி - திரளான மாணவர்கள் பங்கேற்பு!

12:12 PM Apr 28, 2024 IST | Web Editor
நியூஸ்7 தமிழ் மற்றும் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி கண்காட்சி   திரளான மாணவர்கள் பங்கேற்பு
Advertisement

நியூஸ்7 தமிழ் மற்றும் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement

பணிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் பல மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே மாணவர்களுக்கு மேற்படிப்பு சார்ந்த கல்வி வழிகாட்டு முகாம்கள் அடங்கிய மாபெரும் கல்வி கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் சேலத்தில் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 தமிழ் இணைந்து பிரம்மாண்டமான கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வி கண்காட்சியில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி ஆலோசனைகள் மற்றும் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரிகள் மேசைகள் அமைத்து ஆலோசனைகள் வழங்கின. கிட்டத்தட்ட 45 அரங்குகள் அமைக்கப்பட்டு கல்வி சார்ந்த ஆலோசனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் ஏவிஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.சீனிவாசன் , பிரபல திரைப்பட நடிகர் தீனா, வின் யுவர் வீக்னெஸ் மோடிவேஷன் அகாடமியின் தலைமைப் பொறுப்பாளர் ஐ.ஜெகன், கல்வி ஆலோசகர் கே.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி காலை தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.

Tags :
Advertisement