நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் | #Congress-க்கு கிடைத்த வாய்ப்பு!
நான்கு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆராயும். அத்துடன் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கொள்கைகள் வகுக்கவும், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வரவும் மத்திய அரசுக்கு அந்தக் குழுக்கள் பரிந்துரைக்கும். பெரும்பாலான நிலைக் குழுக்கள் மக்களவைச் செயலகத்தின் கீழும், சில நிலைக் குழுக்கள் மாநிலங்களவைச் செயலகத்தின் கீழும் செயல்படுகின்றன.
இதையும் படியுங்கள் : “இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த #Iran தலைவர் கருத்துக்கு இந்தியா கண்டனம்!
இந்நிலையில், மக்களவையில் 3 நிலைக் குழுக்கள், மாநிலங்களவையில் ஒரு குழு என மொத்தம் 4 குழுக்களுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் வெளியுறவுத் துறை, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் உணவுப் பதப்படுத்துதல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய நிலைக் குழுக்களுக்கும், மாநிலங்களவையில் கல்வி, மகளிர், விளையாட்டு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுகளுக்கான நிலைக் குழுவுக்கும் காங்கிரஸ் தலைமை ஏற்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவராக காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.