Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்!

09:58 AM May 16, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீனை தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Advertisement

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 40 செ.மீ. மற்றும் 42 செ.மீ. நீளம் கொண்ட இரண்டு முதிர்ந்த பெண் விலாங்கு மீன்களின் மாதிரிகளை ஆராய்ச்சி மாணவர் கோடீஸ்வரன் கடந்த 2021ஆம் ஆண்டு சேகரித்து கொச்சியில் உள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பியுள்ளார்.

இதை ஆராய்ச்சியாளர் அஜித்குமார் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் அனில் மொஹபத்ரா,  கதிர்வேல் பாண்டியன்,  ஆராய்ச்சி மாணவர் கோடீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, இந்த விலாங்கு மீன் வகை இந்திய நீர்நிலைகளில் உள்ள அனைத்து மீன்களில் இருந்து வேறுபட்டுள்ளது எனவும், கூட்டிணைப்பிலிருந்தும் வேறுபடுகின்றன.  இது புதிய இனங்கள் அரியோசோமா மௌரோஸ்டிக்மா மற்றும் அரியோசோமா அல்பிமாகுலேட்டம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என ஆய்வறிக்கை வெளியிட்டனர்.

இதையும் படியுங்கள் : “பாஜக 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும்” - அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா பேச்சு!

இது தொடர்பாக ஆராய்ச்சி மாணவர் கோடீஸ்வரன் கூறியதாவது :

"தூத்துக்குடி கடற்கரையில் 60 மீட்டர் ஆழத்தில் இந்த விலாங்கு மீன்கள் பிடிபட்டன.  இந்த மீன் இனம் தூத்துக்குடியில் இருந்து சேகரிக்கப்பட்டதினால்,  இதற்கு அரியோசோமா தூத்துக்குடி யென்சே என்ற பெயரிடப்பட்டுள்ளது.  இது காங்கிரிட் வகை விலாங்கு மீன்கள் வகையைச் சேர்ந்ததாகும் . உலக அளவில் 243ஆவது இனமாக இந்த விலாங்கு மீன் இனம் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் மொத்தம் 32 இனங்கள் உள்ளன.  தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் தமிழ்நாடு மற்றும் கேரள கடலோரங்களில் கண்டுபிடித்துள்ள 3-வது வகை விலாங்கு மீன் இனமாகும்"

இவ்வாறு அவர் தெரிவத்தார்.

Tags :
EelINFORMATIONresearchSeaAreaTuticorin
Advertisement
Next Article