Gold Rate | தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,960 உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
அந்த வகையில், தங்கம் விலை நேற்று (அக்.13) கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 640க்கு விற்பனையானது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.197-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து ரூ.11,825க்கும், சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206 ஆக விற்கப்படுகிறது.