“அகண்டா 2” படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் அகண்டா திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் போயபதி ஸ்ரீனு இயக்கிருந்த இப்படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இவ்வெற்றியை தொடர்ந்து அகண்டா படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய போயபதி ஸ்ரீனுவே இப்படத்தையும் இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் ஒரு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இது பாலையா ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்படுத்தியது. இந்த நிலையில் அகண்டா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 12 ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக டிசம்பர் 11 ந் தேதி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
