ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகளில் புதிய விதிமுறைகள் - ஆா்பிஐ பரிந்துரை!
ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகள் மீதான விதிமுறைகளை மறுசீரமைக்க ரிசர்வ் வங்கி (RBI) பரிந்துரைத்தது.
ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகள் மீதான விதிமுறைகளை மறுசீரமைப்பது குறித்து அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-இன் கீழ், வெளிநாட்டு வர்த்தக வரைவு விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
"பல்லாண்டுகளாக ஃபெமா சட்டத்தின கீழ், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் கொள்கைகளை முற்போக்காக ரிசர்வ் வங்கி தாராளமயமாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!
சிறிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் எளிதாக வணிகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில், விதிமுறைகளை மறுசீரமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்கள் அந்நிய செலாவணி பரிவர்த்தனை வாடிக்கையாளா்களுக்கு விரைவான, கூடுதல் திறன் கொண்ட சேவைகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட டீலர் வங்கிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் இந்தப் பரிந்துரைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதுதொடர்பாக ஃபெமா சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரைவு விதிமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட டீலர் வங்கிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகள் குறித்து ரிசர்வ் வங்கியிடம் செப்டம்பா் 1ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்"
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.