புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்! மத்திய அரசு அறிவிப்பு!
06:25 PM Feb 24, 2024 IST
|
Jeni
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த மூன்று மசோதாக்களும் சட்டமாகின. இந்நிலையில், இந்த மூன்று சட்டங்களும் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது. இந்த புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார்.
புதிய சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article