முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் விருது - #DMK தலைமை அறிவிப்பு!
திமுக முப்பெரும் விருது வழங்கும் விழாவில் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் விருது வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"திமுக உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பிப்பதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த1985ல் தொடங்கி வைத்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயர்களில் 1985 முதல் திமுக உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், 2008 இல் பாவேந்தர் விருதும், 2018 இல் இனமானப் பேராசிரியர் விருதும் சேர்க்கப்பட்டது. திமுக தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்குவதில் திமுக தலைமை பெருமை கொள்கிறது. இந்த ஆண்டுக்கான 'மு.க.ஸ்டாலின் விருது' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கனுக்கு வழங்கப்பட உள்ளது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.