ராமநாதபுரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.134 கோடி மதிப்பில் 150 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 55000 பேருக்கு ரூ.426 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனைத்தொடந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
அதன்படி, ராமநாதபுரம் நகராட்சியின் தேசிய நெடுஞ்சாலை பகுதி ரூ.30 கோடி செலவில் 6 வழி சாலையாக தரம் உயர்த்தப்படும்.
திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் உள்ள 16 கண்மாய்கள் ரூ.18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
கீழக்கரை வட்டத்தில் இருக்கும் 6 கண்மாய்கள் ரூ.4.65 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும்.
கடலாடி வட்டம் - செல்வனூர் கண்மாய் ரூ.2.60 கோடியிலும், சிக்கல் கண்மாய் ரூ.2.30 கோடியிலும் மறுசீரமைக்கப்படும்.
பரமக்குடி நகராட்சிக்கு ரூ.4.60 கோடி செலவில் புதிய அலுவலக கட்டப்படும்.
கமுதியில் ரூ.1 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
ரூ. 10 கோடி செலவில் அரசு மகளிர் கல்லூரியில் வசதிகளை மேம்படுத்தி புதிய பாடப்பிரிவுகளை தொடங்கி வைக்கும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலக கட்டிடம், ரூ.1.5 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.