For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
09:55 PM Dec 05, 2025 IST | Web Editor
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்
Advertisement

ஹாலிவுட்டின் 100 ஆண்டு கால பாரம்பரியமுள்ள தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் ஆகும். ஹாரி பாட்டர், டிசி சூப்பர் ஹீரோ படங்கள் போன்ற புகழ் வாய்ந்த படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் தற்போது வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை, ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள், ஹெச்.பி.ஓ. மேக்ஸ் (HBO MAX) ஓடிடி தளம், பிரபல டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவை அனைத்தும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது.

Tags :
Advertisement