Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Neomax மோசடி வழக்கு | பாதிக்கப்பட்டவர்கள் நவ.15ம் தேதி வரை புகார் அளிக்கலாம் - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு!

09:59 AM Nov 04, 2024 IST | Web Editor
Advertisement

நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்கள் மீது பாதிக்கப்பட்ட
முதலீட்டார்கள் வரும் நவ.15-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் என பொருளாதார
குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisement

மதுரையை தலைமையிடமாக கொண்டு 'நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், நெல்லை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு
செய்தால், அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.

இதை நம்பி ஏராளமானோர் பல ஆயிரம் கோடி ரூபாய் - க்கு மேல் முதலீடுகளை செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் இந்நிறுவனத்தினர் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுரையை சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

இதையும் படியுங்கள் : கந்த சஷ்டி திருவிழா | 3-ஆம் நாள் யாகசாலை பூஜை – #Thiruchendur -ல் குவியும் பக்தர்கள்!

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது பெயர், முகவரி செல்போன் எண், ஆதார் எண், பாண்டுகளின் எண்ணிக்கை, நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை , முதலீடு செய்த வங்கி கணக்கு ஏஜென்ட்களின் விவரம் உள்ளிட்டவைகளை அடங்கிய விவரங்களுடன் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மதுரை மாநகர் தபால்தந்திநகர் பார்க்டவுண், சங்கரபாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நவம்பர் 15-ம் தேதி வரை நேரில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
MaduraiMaduraiHighCourtBenchneomaxNeomaxFraudCaseNews7Tamilnews7TamilUpdatesTamilNadu
Advertisement
Next Article