Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது!

10:34 AM May 26, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லையில் ரவுடி தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

திருநெல்வேலி மாநகரத்தின் எல்லை பகுதியான கே.டி.சி நகரில் அமைந்துள்ள பிரபல
உணவகம் முன்பு கடந்த 20-ம் தேதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் பிரபல ரவுடி தீபக் ராஜா மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல்துறை உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி நடந்தது. அதனுடன் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஆதர்ஸ் பச்சோரா தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்தது. தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முத்து சரவணன், ஐயப்பன், தம்பன் மற்றும் ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது (SC/ST act) வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கையின் போது அவர்களில் இருவர் தப்ப முயன்றதாகவும், அப்பொழுது அவர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீபக் ராஜா கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags :
ArrestDeepak RajaNellaipalayamkottaiPoliceRowdy
Advertisement
Next Article