Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்ட்ராங் ரூம் சாவி வராததால் அம்பாசமுத்திரத்தில் பூட்டு உடைப்பு - முகவர்கள் வாக்குவாதம்!

09:08 AM Jun 04, 2024 IST | Web Editor
Advertisement

அம்பாசமுத்திரத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டிற்கான சாவி வராததால் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று நிறைவடைந்தது.  இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.  இந்த நிலையில்  தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன்,  ஐபேட்,  லேப்டாக்,  ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர் – கன்னியாகுமரியில் பரபரப்பு!

இந்நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சாவி வராததால் பூட்டை உடைத்து திறக்க முயற்சிக்கும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகளுக்கும்  முகவர்கள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags :
ADMKAnnamalaiDMKElectionswithNews7tamilEPSMKStalinParliamentElections2024Seeman
Advertisement
Next Article