For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

09:39 AM May 29, 2024 IST | Web Editor
நெல்லை   சென்னை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
Advertisement

நெல்லை - சென்னை,  நாகா்கோவில் - சென்னை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

Advertisement

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது,

நெல்லையிலிருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் கோடை கால வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 27ம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு (எண் : 06070) மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06069) ஜூன் 7 முதல் 28 ஆம் தேதி வரை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.  இந்த ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில் பட்டி,  விருதுநகா், சிவகங்கை, காரைக்குடி,  பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை,  சிதம்பரம்,  விழுப்புரம்,  செங்கல்பட்டு வழியாக எழும்பூா் வந்தடையும்.

அதேபோல் நாகா்கோவிலில் இருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு அதி விரைவு ரயில் ஜூன் 2 முதல் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்பட்டு (எண்: 06019) மறு நாள் காலை 11.15 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06020) ஜூன் 3 முதல் ஜூலை 1 வரை வாரம்தோறும் திங்கள்கிழமை மதியம் 3 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை 3.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.  இந்த ரயில் நாகா்கோவில், நெல்லை, விருதுநகா், மதுரை,  திருச்சி,  விருத்தாசலம்,  விழுப்புரம்,  செங்கல் பட்டு வழியாக சென்னை எழும்பூா் வந்தடையும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement