Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.70 ஆயிரத்துக்கு நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள்... அடுத்து வெடித்த சர்ச்சை!

08:02 PM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

முதுநிலை நீட்தேர்வு நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22-ம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிற நுழைவுத் தேர்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக, நீட் முதுகலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஆக. 8) வெளியாக உள்ளது. இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஷிஃப்டு விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீட் முதுகலை வினாத்தாள்கள் வெளியாகி உள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ரூ.70 ஆயிரத்திற்கு வினாத்தாள்கள் விற்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வாட்ஸ் அப், டெலிகிராம் பக்கங்களில் எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்டுகளை, சிலர் தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் மற்றும் இண்டெலிஜென்ஸ் பீரோ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Central governmentleakedNEETNEET PGNews7Tamilnews7TamilUpdatesNTAquestion paper
Advertisement
Next Article