For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு - மேலும் இருவரை கைது செய்தது சிபிஐ!

10:05 PM Jun 28, 2024 IST | Web Editor
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு   மேலும் இருவரை கைது செய்தது சிபிஐ
Advertisement

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் இரண்டு பேரை சிபிஐ இன்று (28.06.2024) கைது செய்தது . 

Advertisement

நிகழாண்டு நடைபெற்ற நீட்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன.  வினாத்தாள் கசிவு,  கருணை மதிப்பெண்,  67 பேருக்கு முழு மதிப்பெண்கள்,  நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள்,  ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது,  ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இந்த புகார் தொடர்பாக பீகாரில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனையடுத்து சிபிஜ விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.  இதனிடைய,  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீஹார் தலைநகர் பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.  சிபிஐ விசாரணை தொடங்கியதற்கு பிறகு மணீஷ்குமார்,  அசுதோஷ் குமார் ஆகிய இருவரும் கைது முதன்முறையாக கைது செய்யப்பட்டனர்.

கைதை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அப்போது, தேர்வுக்கு முன்னர் குறிப்பிட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் அவற்றிற்கான விடைகளை இருவரும் அளித்ததாக சிபிஐ தெரிவித்தது.  இந்த நிலையில்,  ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருவரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (28.06.2024) ஹசாரியாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக்,  துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் தேசிய தேர்வு முகமையில் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்கள் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement