For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'நீ இருக்கும் உசரத்துக்கு...' வெளியானது ‘ஜமா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

02:30 PM Jul 19, 2024 IST | Web Editor
 நீ இருக்கும் உசரத்துக்கு     வெளியானது ‘ஜமா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
Advertisement

‘ஜமா’ திரைப்படத்தின் முதல் பாடலான 'நீ இருக்கும் உசரத்துக்கு' என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜமா’.  பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த ‘Learn & Teach Production’நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.  நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும் போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். ‘ஜமா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது.  இந்த நிலையில், ‘ஜமா’ திரைப்படத்தின் முதல் பாடலான 'நீ இருக்கும் உசரத்துக்கு' என்ற பாடல் வெளியாகியுள்ளது.  இந்தப் பாடலை இளையராஜா எழுதி இசையமைத்துள்ளார்.  யுவன் ஷங்கர் ராஜா, ஜஸ்டின் பிரபாகன் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

Tags :
Advertisement