Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாமக மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12:48 PM May 11, 2025 IST | Web Editor
சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவிருக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழ்நாடு பாஜக சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.

நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும் எனப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், மாநாட்டுக் குழுத்தலைவர் எனது அன்பிற்குரிய அன்புமணி ராமதாசுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
ANBUMANIConventionNayinar NagendranPMKramadasWishes
Advertisement
Next Article