For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நள்ளிரவில் சாலையில் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடும் நயன்தாரா | வீடியோ வைரல்!

10:28 AM Apr 06, 2024 IST | Web Editor
நள்ளிரவில் சாலையில் ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடும் நயன்தாரா    வீடியோ வைரல்
Advertisement

நடிகை நயன்தாரா நள்ளிரவில் ரோட்டோரம் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.  இவர் தன்னுடைய கணவருடன் சென்னையில் செட்டிலாகிவிட்டாலும்,  நயனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேரளாவில் தான் வசித்து வருகின்றனர்.  அவர்களை காண அடிக்கடி அவர் கேரளா செல்வதுண்டு.  அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களோடு கேரளா சென்றுள்ளார் நயன்தாரா.

தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் கேரளா சென்றிருந்தார்.  அப்போது அங்குள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக அரட்டை அடித்த நயன்தாரா,  நள்ளிரவில் அவர்களை அழைத்துக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிட சென்றிருக்கிறார்.  ரோட்டோர கடையில் அவர் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டபோது எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் நயன்தாராவின் பேனரை பார்த்தபடி அவரது நண்பர்கள் இருவரும் நின்று கொண்டு, நயனை நேர்ல பார்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டே திரும்பியதும்,  அங்கு நயன்தாரா கியூட்டாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து வீடியோ எடுக்கின்றனர். நண்பர்கள் தன்னை கிண்டலடிப்பதை ரசித்தபடி அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

இதில் ஹைலைட் என்னவென்றால் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட வந்திருக்கிறார் நயன்தாரா.  தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,  அதற்கு ரெஸ்ட் விட்டு இருவரும் பேமிலியோடு கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement