For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டுபிடிப்பு!

01:57 PM Jul 05, 2024 IST | Web Editor
வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டுபிடிப்பு
Advertisement

வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம்
ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு
பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914
தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பட்டன. தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில்,

”இந்த நாணயம் கி. பி. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது. இக்காசின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இக் காசில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement